சத்தம் இல்லா யுத்தம்
அன்பு நண்பர்களே!!!!!
இந்த யுத்தத்தில் பங்கு பெற ஆயுதங்கள் தேவை இல்லை!!!
சமுதாய அக்கரையுள்ள நல்ல மனம் படைத்தவர்கள் மட்டும் போதும்.
குடி பழக்கத்தை எதிர்த்து போரிடுவோம்!
வலுவான
ஆரோக்கியமான
எதிர் கால இளைஞர்களை
உருவாக்குவோம்!
குடி பழக்கத்தை எதிர்த்து போரிடுவோம்!
வலுவான
ஆரோக்கியமான
எதிர் கால இளைஞர்களை
உருவாக்குவோம்!
குடி பழக்கம் எப்பொழுது ஆரம்பித்திருக்கும் ?
குடிப்பதால் என்ன தீமைகள்?
குடிப்பதால் சமுதாயத்தில் மாற்றங்கள் என்ன?
குடிப்பதால் யாருக்கு லாபம்?
குடிப்பதால் சமுதாயத்தில் மாற்றங்கள் என்ன?
குடிப்பதால் யாருக்கு லாபம்?
குடிப்பதை விட போதை தரும் பழக்கங்கள் என்ன என்ன?
என்று ஒரு சிறிய கருத்து பரிமாற்றங்களை சிந்திப்போம் !!!!!
குடி பழக்கம் எப்பொழுது ஆரம்பித்திருக்கும்?
வள்ளுவர் வாழ்ந்த காலத்திலயே மயக்கம் தரும் பானம் பழக்கத்தில் இருந்திருன்கின்றது. ஆதலால் தான் வள்ளுவர் குடி எவ்வாறு மனிதனை வாழும் காலத்திலயே நரகத்திற்கு கொண்டு செல்லும் என்று தனது 921 - 930 குறள்களில் எழுதி உள்ளார்.
உதாரணம் :
துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள்வன் பவர் (926 )
சிந்து சமவெளி நாகரித்தின் சான்றுகள் சிலவற்றை ஆராயும் பொழுது கிடைத்த அடையாளங்கள் நமக்கு அந்த காலத்தில் சோம பானம், சுறா பானம் என்ற மது பான பழக்கம் இருகின்றது என்பது தெரிகின்றது. ஆதலால் பண்டை காலம் முதலே குடி பழக்கம் இருந்தது வந்து உள்ளது.......
2003 ஆம் ஆண்டில் மது விற்பனையை அரசாங்கமே ஏற்று நடத்த ஆரம்பித்தது (இன்று லாபம் தரும் தொழிலாக மாறி விட்டது)
(பாகம் 2)
மது ஏற்படுத்தும் உள் மாற்றம்
2003 ஆம் ஆண்டில் மது விற்பனையை அரசாங்கமே ஏற்று நடத்த ஆரம்பித்தது (இன்று லாபம் தரும் தொழிலாக மாறி விட்டது)
இந்தியா அளவில் பல தொழில் அதிபர்கள் மது பான விற்பனையை பகிரங்கமாக ஆரம்பித்து உள்ளனர் .
தடுமாறும் இளைஞர்கள் !
எதிர்கலாம்????????
ஆதலால் மதுவை எதிர்த்து போரிடுவோம்!
(பாகம் 2)
மது ஏற்படுத்தும் உள் மாற்றம்
இனிய நண்பர்களே,
இந்த மெளனப் போரில் பங்கு கொள்ளும் அனைவரும் வெற்றி பெற்றவர்களே!!!!! ஆற்றல் மிக்க இளைஞர்கள் மற்றும் அணைத்து வயதினரையும் இதில் கலந்து கொள்ள ஆவலுடன் அழைக்கிறேன்!!!!
நூற்றி இருபது கோடியை தொட்டுக் கொண்டிருக்கும் இந்தியா மக்கள் தொகையில் சும்மார் 62 .5 மில்லியன் மக்கள் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகி வருகின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது
யார் யார் குடிக்கின்றனர்? சிறுவயதில் 11 - 13 வயது குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் திரைப்படங்கள், தொலைகாட்சிகள் தொடர்கள் ஆகியவற்றை பார்த்து ஒரு வகை ஆர்வதினால் குடிக்க ஆரம்பிக்கின்றனர்.
ஆசிரியரும் குடிக்கிறார்
மாணவனும் குடிக்கிறான்
சட்டம் ஓழுங்கு காக்கும் வக்கீலும் குடிக்கிறார்
ரௌடியும் குடிக்கிறான் மருத்துவரும் குடிக்கிறார்
நோயாளியும் குடிக்கிறான்
ஐடி வேலையில் இருபவரும் குடிக்கிறார்
கூலி தொழிலாளியும் குடிக்கிறான்
இறுதியாக
இறுதியாக
ஆணும் குடிக்கிறான் பெண்ணும் குடிக்கிறாள்
குடி பழக்கத்தினால் ஏற்படும் உடல் மாற்றங்களை கவனிப்போம்:
- இங்கு முதலில் சென்றடையும் மது உணவு குழாயை அறிக்கின்றது.
- ஜீரண உறுப்புகளின் ஆற்றலை குறைக்கின்றது.
- வயிற்றின் உள்ள அமைப்பை அறிகின்றது அதனால் வயிற்றில் புண் ஏற்படுகின்றது இதுவே புற்று நோய்க்கு மூல காரணமாக அமைகின்றது.
கல்லீரல்:
- மஞ்சள் காமாலை நோய் எற்பட காரணமாகின்றது.
- நிரந்திரமாக கல்லீரலின் வேலையை செய்ய விடாமல் செயலிழக்கச் செய்கின்றது.
- மூளையின் செயல் திறன் குறைகின்றது.
- மறதி அதிகமாகின்றது.
- மன ஒரு நிலைப்படுதுதல் குறைகின்றது.
- சீரான இதய துடிப்பு மாறுகின்றது.
- இரதக் குழாய்கள் சேதமடைவதால் இதயத்தை வலுவிழக்க செய்கிறது.
- இதயம் ஊதி பெரிதகின்றது.
- கை கால்கள் நடுங்குகின்றது.
- நிற்பதும் நடப்பதும் சிரமம்மாகிறது.
- புரதசத்து குறைவதால் தசைகள் சேதமடைகிறது.
பொதுவாக: சரியாக உணவு உட்கொள்ள முடியாததால் வயிற்றுவலி தலை சுற்றல், சோர்வு, சத்து குறைவு ஏற்படுகின்றது........
இந்த blog -ஐ படிக்கும் இளைஞர்களே சத்தமில்லாமல் இதை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும்!!!!! மெளனயுத்தம் தொடங்கட்டும்!!!!!
மதுவை ஒழிப்போம்!
வெற்றி பெறுவோம் !
வளமுடன் வாழ்வோம்!
( பாகம் 3)
மது ஏற்படுத்தும் சமுதாய மாற்றம்
எனது அருமை நண்பர்களே!!!!!
சமுதாயம் என்பது என்ன?
குடும்பமாக சேர்ந்து வாழும் இந்திய நாட்டில் குடும்ப
உறுப்பினர்களில் ஒருவர் குடித்து விட்டு கெட்டு அழிய குடும்தில்
இருப்பவர்கள் விரும்புவதில்லை - விடுவதும் இல்லை அல்லவா ? ஆதலால் குடிப்பவர்கள் தாங்கள் குடிப்பதால் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கவே வெளியில் சென்று குடிக்க பழகுகின்றான்.
குடிக்க வெளியில் வந்து விடுவதால் சமுதாயத்தில்ஏற்படும் பல மாற்றங்கள்:
சுற்றுல்லா செல்லும் போது குடிப்பாதால்
அங்குள்ள கடைகளில் கேட்ட பொருள்கள் உடனேயே கிடைக்கவில்லை என்றால் மேஜை, நாற்காலி, டம்ளர்,தட்டு, உணவு பொருள்களை வீசி எரிந்து கலாட்டா செய்தல்.
குடித்து விட்டு போது இடங்களில் வாந்தி எடுத்து அசுத்தம் செய்தல்.எல்லா வயதினரும் ஆண் பெண் இருபாலரும் பயணிக்கும் பேருந்துகளிலும் ரயில்களிலும் தாறுமாறாக விழுந்து கிடத்தல்.
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இன்று வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசு நான்கு வழிச்சாலை அமைத்து இந்த பாதைகளில் வண்டி பழுது பார்க்கும் இடங்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்லும் இடங்களை நம் "குடிமகன்கள்" திறந்த வெளி "பார்" களாக்கி விட்டார்கள் குடித்து விட்டு பெண்களை அடிப்பதும்,இழிவாக பேசுவதும் கிண்டல் பேசுவதும் அதிகமாகி வருகின்றது
தற்போது வேலைக்கு செல்லும் போதும் குடித்து விட்டு செல்கின்றனர்.இவ்வாறு பணியிடங்களுக்கு குடித்து விட்டு செல்வது ஒழக்கக்கேடானது. அதனால் பாதிப்படைந்தவர்கள் அதிகரித்து வருகின்றனர்......
இந்த சமுதாயத்தில் எத்தனையோ எண்ணிலடங்கா மக்கள், இளவயது மாணவர்கள்மற்றும் லாரி ஒட்டுனர்கள் குடிப்பதால் ஏற்படுதும் விபத்துக்களால் பாதிக்கபட்டுள்ளனர்....
இந்த கருத்து பரிமாற்றத்தின் மூலம்
குடிமகன்கள் தானும் கெட்டு
நஷ்டபட்டு
அடிபட்டு வீழ்வதல்லாமல்
பிறரையும் கண்ணீர் சிந்த வைக்கின்றனர்!!!!!
ஆதலால் தோழர்களே!
உங்களுக்கும் உங்களைப் போன்ற பல்லாருக்கும் இந்த மெளன யுத்தத்தில் நிறைய கேள்வி கணைகளை ஏவி விடுங்கள்!
ஏன் குடிக்கிறீர்கள்?
அல்லது ஏன் குடிக்கின்றார்கள்?
குடிப்பதால் என்ன நன்மை?
பிறர்க்கு என்ன தீமை?
குடும்பதினருக்கும் உங்களுக்கும் என்னென்ன நஷ்டம்?
சிந்தியுங்கள் கேள்விக்கு
விடைகாணுங்கள்
வெற்றி பெறுங்கள்!!!
பாகம்-4
எதோ சில இடங்களில் மதுபான விற்பனை இருந்தது..... மது பான பிரியர்கள் புதுச்சேரிக்கு சென்று குடித்து வந்தனர்..சிலர் மட்டுமே,அதுவும் தவறான பழக்கம் என்பதால் யாருக்கும் தெரியாமல் மது அருந்தி வந்தனர்...ஆனால் தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு மது பான விற்பனையை டாஸ்மாக் என்ற பெயரில் தமிழ் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் தொடங்கி விட்டது. அது முதல் தள்ளாடும் தமிழ் மக்கள் ஏராளமானார்கள்
பாகம்-4
மதுவால் லாபம் யாருக்கு?
அறிவார்ந்த நண்பர்களே!
மதுவால் நஷ்டம் யாருக்கு?
அறிவார்ந்த நண்பர்களே!
சீனா, அமெரிக்க , அரேபிய நாடுகள் ஸகாட்லாந்து
போன்ற பல வெளிநாடுகளிருந்தும் பல வகைப்பட்ட
லாபம் பார்த்து வரும் தொழிலதிபர்கள் பலர் உள்ளனர்.
அவர்களில் ஒரு தொழிலதிபர் மது விற்பனையில் ஒரு வருட வருமானமாக ஏறக்குறைய 38,200 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்...... நம் இந்திய மக்களோ IT துறையிலும் இரவு
மருத்துவர்கள் நோயாளிகளின் உயிருடன் போராடி
சம்பாதித்த பணத்தையும் பல துறையினர் கடின உழைப்பால்
சம்பாதித்த பணத்தையும் மது கடைகளில் இழக்கின்றனர்...
தமிழகத்தில் தனி நபர்கள் மது கடைகள் இயக்கி வந்த காலத்தில்
கரூர் மாவட்டத்தில் மட்டுமே 112 டாஸ்மாக் கடைகள் .... திருவிழா
லாபத்தின் புள்ளி விவரத்தை பார்த்து விட்டீர்கள் அல்லவா?
நஷ்டம் யாருக்கு????????
குடிக்கும் ஒவ்வொரு நபருக்கும்.....
- பண நஷ்டம் பொருளாதார பின்னடைவு.
- உடல் நலக் குறைவு.
- கெளரவம் இழத்தல்.
- குடும்பங்களில் நல்லுரவுகளை இழத்தல்.
- பணியிடங்களில் குடிப்பதால் வேலை இழத்தல்.
- முடிவில் விபத்துக்களால் உயிர்இழத்தல்.
ஆதலால் சிந்தியுங்கள் செயல்படுங்கள்
ஒன்று சேருவோம்!
போராடுவோம்
மதுவை ஒழிப்போம்
வெற்றி பெறுவோம்!!!!!
இப்படிக்கு
க.சண்பகவல்லி



Nice Start with a good message Akka! Keep going! - Vidhya
ReplyDeletehi my dear senoir friend,
ReplyDeleteyou have started with a nice information........