Friday, February 25, 2011

சத்தம் இல்லா யுத்தம்!!!!!

                                                   
                                                        பாகம்-5
                                           
                        மதுவை விட போதை தரும் பழக்கங்கள் 
 
அருமை நண்பர்களே,

                                       இது வரை நான்கு பகுதிகளாக என்னுடன் பயணித்த பண்பான நண்பர்களே! சத்தமில்லாயுத்தத்தின் முடிவுக்கு வந்து விட்டோம். போதை என்பது பழக்கதினால் வருவது குடிப்பது போதை தரும் என்பது பழகிவிட்டதால் ஏற்பட்டது. சற்றே பழக்கத்தை மாற்றினால் வாழ்விற்கு ஒளி கிட்டும்! நமக்கு மட்டும் அல்லாது 
                                                பிறர்க்கும் நல்வழி காட்டும்! 
                                               அழிய புகழுடன் வாழலாம்!
            
             அன்பை பரிமாறிக் கொள்வதும் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதும் மதுவை விட போதை தரும் பழக்கமாகும்.
             ஒரு 10 நிமிடங்கள் தினமும் இந்த எளிய  பழக்கத்தை செய்ய ஆரம்பித்தால் பிறகு எல்லாச் செல்லவங்களும் நம்மை தேடி வந்து சேரும்.
          

  • செடி வளர்த்தல்,பூக்கும் செடி,காய்க்கும் செடி அலங்கார செடி  வளர்த்தல்... சாலை ஓரங்களில் மரம் நட்டு பராமரித்தல்.வீடுகளில் தோட்ங்களில் வாழை, மா,எலுமிச்சை போன்றவைகளை நட்டு பராமரித்தல்.

  • கிளி,புறா,குருவிகள்,காக்கைகள் ஆகியவற்றிற்கு உணவிடுதல்,அவை மகிழ்ந்து குளிக்க குடிக்க அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்தல்.நாம் உணவளிக்க ஆரம்பித்து விட்டால் அவை நம் வீடு தேடி வரும்,அதன் சதம் கடுகு இனிமை தரும்.


  • நாய்,பூனை,மாடு  ஆகியவற்றிற்கு உணவு  அளித்தல்.     




  • மீன் தொட்டி வளர்த்தல்.                                                     








  • வேர்வை வெளியேறும் வரை உடற்பயிற்சி                        செய்தல்.நடத்தல்நீச்சலடித்தல்,ஓடுதல்,cycling செய்தல்.




  • தியானம் செய்தல்.                                                                    








  • இசைக்கருவி வாசித்தல்.                                                






  • புத்தகங்கள் படித்தல்.                                                                              





  • முதியோர் இல்லங்களுக்கும் அநாதை குழந்தைகள் இல்லதிற்கும்  சென்று அவர்களுடன் உரையாடி மகிழ்தல்.



  • பிரார்த்தனை செய்தல்.                                                   







  • அன்னதானம்  செய்தல்.                                                                  





  • ரத்த தானம் செய்தல்.                                             







                        மேற் கூறியவை போன்று நம்மால் முடிந்தவற்றை செய்வதை வழக்கமாக்கி கொண்டால் இந்த நற்செயல்களே நமக்கு
                                          நற்பெயரையும்
                                          புகழையும்
                                          உயர்வையும்
                                          வெற்றியும் தரும் என்பது  திண்ணம்!!!!!
                                          உறுதி!!!!! 




                                                                             இப்படிக்கு,                                                                                                                                 
                                                                             க.சண்பகவல்லி                                         

No comments:

Post a Comment